தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

கோப்பு படம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Share this:
    தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார தமிழ்நாட்டில் பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக திறக்கப்படவில்லை. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டி உள்ளது. எனவே விரைவில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்களிடம் கருத்து கேட்க 8ம் தேதி வரை கருத்து கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். சமூக இடைவெளி விட்டு பெற்றோர்களை அமர வைத்து அவர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து எழுத்துபூர்வமாக கருத்துக்களை கேட்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: