காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது... 2 வார விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

காஷ்மீரில் பதற்றம் தணிந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன

news18
Updated: August 19, 2019, 8:45 AM IST
காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது... 2 வார விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
காஷ்மீர்
news18
Updated: August 19, 2019, 8:45 AM IST
காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் 2 வார விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட உள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரங்களால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் கடந்த இரண்டு வாரமாக ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா மும்ப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் பதற்றம் தணிந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு தொலைபேசி, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான தொலைபேசி இணைப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன.


இந்நிலையில், காஷ்மீரில் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் பள்ளி, கல்லூரிகள் 2 வார விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட உள்ளன. ஸ்ரீநகர் மாவட்டத்தில் 190 பள்ளிகள் இன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் ரோகித் கன்சல் தெரிவித்துள்ளார்.

Also watch

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...