KYC புதுப்பிக்க வாடிக்கையாளர்கள் தபால், இமெயில் மூலம் விவரங்களை அனுப்பலாம் - SBI அறிவிப்பு!

எஸ்.பி.ஐ

KYC விவரங்களை புதுப்பிக்க கஸ்டமர்கள் தங்களது வங்கி கிளைகளுக்கு செல்ல தேவை இல்லை என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கூறி உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் வகையில் "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" எனப்படும் KYC விவரங்களை புதுப்பிக்க கஸ்டமர்கள் தங்களது வங்கி கிளைகளுக்கு செல்ல தேவை இல்லை என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கூறி உள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC விவரங்களை அப்டேட் செய்ய மற்றும் விதிமுறைகளை புதுப்பிக்க தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் வழியே தேவையான விவரங்களை அனுப்பலாம் என்றும் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தைப் பற்றிய தகவல்களை பெறுவதன் மூலம் வங்கி சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை KYC மூலம் உறுதிசெய்கின்றன. இதற்காக வங்கிகள் அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களின் KYC விவரங்களை புதுப்பிக்கின்றன.

இதன்படி KYC ஆவணங்களை புதுப்பிக்க, SBI வாடிக்கையாளர்கள் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது:

1) பாஸ்போர்ட்

2) வாக்காளர் அடையாள அட்டை,

3) ஓட்டுநர் உரிமம்

4) ஆதார் அட்டை,

5) NREGA கார்டு

6) PAN கார்டு.

இந்நிலையில் KYC புதுப்பித்தல் தொடர்பாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI, "பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதாலும், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதையும் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் பெறப்படும் ஆவணங்களின் அடிப்படையில் KYC புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது ”என்று தெரிவித்துள்ளது.

மேலும் KYC புதுப்பித்தல் நோக்கத்திற்காக வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் தங்களது கிளைக்கு செல்ல தேவையில்லை என்றும் கூறி உள்ளது. அதே போல SBI வங்கி அதன் அனைத்து கிளைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், KYC விவரங்களை புதுப்பிக்க தங்கள் வாடிக்கையாளர்களை வங்கிக்கு நேரில் வரவழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது KYC ஆவணங்களை புதுப்பிக்காவிட்டால் CIF-களை முடக்கும் வழக்கமான நடைமுறையை மே 31 வரை பின்பற்ற வேண்டாம் என்றும் SBI அதன் கிளைகளை கேட்டு கொண்டுள்ளது.

Also read... சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள்!

தொற்றுநோய்க்கு மத்தியில் KYC -ன் தேவைக்காக தங்கள் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்நடவடிக்கை பயனளிக்கும். தவிர KYC விதிமுறைகளை பூர்த்தி செய்ய NRI இந்தியர்கள் பாஸ்போர்ட் அல்லது குடியிருப்பு விசா நகல்களை சமர்ப்பிக்கலாம். குடியிருப்பு விசா நகல்கள் வெளிநாட்டு அலுவலகங்கள், நோட்டரி, இந்திய தூதரகம், SBI -யின் அங்கீகரிக்கப்பட்ட கிளை உள்ளிட்டவை மூலம் சான்றளிக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: