கொலை வழக்கில் சரணடைந்தார் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்!

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

கொலை வழக்கில் சரணடைந்தார் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்!
ராஜகோபால்
  • News18
  • Last Updated: July 9, 2019, 4:42 PM IST
  • Share this:
வட பழனி மருத்துவமனையில் இருந்து சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக புறப்பட்டுச் சென்றார். அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது மருத்துவமனைக் காவலாளிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

நாகை மா‌வ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்‌தவ‌ர் ‌ஜீவஜோ‌தி. இவரது கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சா‌ந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கொலை செ‌ய்ததாக குற்றம் சா‌ற்றப்பட்டது.

இ‌ந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்,ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவல் சிறை‌த் த‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஜாகீர் உசேன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் உள்ளிட்ட 11 பேருக்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.


இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. மேலும், குற்றவாளிகள் அனைவரும் ஜூலை 7-ம் தேதி நேரில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, மற்ற குற்றவாளிகள் 9 பேரும் நேற்று சரணடைந்தனர். இந்தநிலையில், நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராஜகோபால் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபால் உடனே சரணடையவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.Also see:

First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்