Home /News /live-updates /

தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வல்ல - சரத்குமார்

தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வல்ல - சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார்

மாணவர்களின் மனநிலையை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வல்ல.
    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேர்வு பயத்தால் கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ என்பவரும், ஆன்லைன் வகுப்பு சரிவரப்புரியாததால் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் அபிஷேக் என்பவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றி ஒன்று மட்டுமே இலக்காக பயணிக்கும் இன்றைய இளைஞர்களும், மாணவ சமுதாயமும் தேர்வுக்கு பயந்து தற்கொலை, தோல்விக்கு பயந்து தற்கொலை, பாடம் புரியாததால் தற்கொலை என அச்சஉணர்வால் உண்டாகும் தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

    நேர்மறை, எதிர்மறை சம்பவங்களை சமமாக அணுகும் முறையையும், எப்பேற்பட்ட சூழ்நிலையையும் கடந்து செல்லும் மனப்பக்குவத்தையும் உண்டாக்கும் விதமாக மன உறுதி பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும். அதற்கென தனியே உளவியல் ஆசிரியர்களை கல்லூரிகள், பள்ளிகள்தோறும் பணியமர்த்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

    Also read... முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மறைவு - வைகோ இரங்கல்

    சுயக்கட்டுப்பாடு, எதிர்பார்ப்பின்றி வாழ பழகுதல், வாழ்க்கை மீது நம்பிக்கை, சுய மதிப்பீடு, தைரியத்துடன் சவால்களை சமாளிக்கக்கூடிய உறுதி இருந்தால் இழப்பையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் பிள்ளைகளுக்கு வரும்.



    எனவே, எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை இளைய சமுதாயம் உணர வேண்டும். மேலும், பெற்றொர்கள் பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையை விதைத்து அவர்களின் மனநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sarathkumar

    அடுத்த செய்தி