• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து அறிவிப்பு.. 'எங்களுக்காக வேண்டாம், ப்ளீஸ்' ரசிகர்கள் குமுறல்

நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து அறிவிப்பு.. 'எங்களுக்காக வேண்டாம், ப்ளீஸ்' ரசிகர்கள் குமுறல்

நாக சைதன்யா - சமந்தா

நாக சைதன்யா - சமந்தா

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒத்த மனத்துடன் விவகாரத்து அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலர் வேதனை உடன் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நாகசைதன்யா இன்டாகிராம் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். பத்துவருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.




    இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது மன வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். சமந்தாவின் பதிவிற்கு ரசிகர் ஒருவர் எங்களுக்காக இதை செய்ய வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனாளர் இந்த செய்தியை கேட்ட உடன் இதயம் நொறுங்கியதாக பதிவிட்டுள்ளார்.









    கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் 'எஸ்' என்று பெயரை மாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: