’எள்ளு வய பூக்கலையே...’ சூப்பர் சிங்கர் மேடையை மெய் மறக்கச் செய்த சைந்தவி!

சைந்தவி

பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ஆகியோர் சூப்பர் சிங்கர் 8-ன் ஜட்ஜ்களாக செயல்படுகிறார்கள்.

 • Share this:
  விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். நேற்று இதன் 8-வது சீசனின் அறிமுக விழா நடந்தது.

  காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இடைவிடாது 9 மணி நேரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழா ஒளிபரப்பாகியது. இதில் தென்னிந்திய இசைத் துறையில் மிளிரும் ஜாம்பவான்களான ஷங்கர் மகாதேவன், ஹரிஹரன், விஜய் பிரகாஷ், விஜய் யேசுதாஸ், எஸ்.பி.பி சரண், கார்த்திக், சித் ஸ்ரீராம், சைந்தவி, ஷாஷா திரிபாதி, கிரேஸ் கருணாஸ், சின்னப்பொண்ணு, ஆண்டனி தாசன், கானா பாலா, சக்தி ஸ்ரீ கோபாலன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.  சென்ற சீசன்களைப் போலவே, இந்த சீசனையும் பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்கள். பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ஆகியோர் சூப்பர் சிங்கர் 8-ன் ஜட்ஜ்களாக செயல்படுகிறார்கள்.

  தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பாடி அசத்தினர். அந்த வகையில் பாடகி சைந்தவி பாடிய ‘எள்ளு வய பூக்கலையே’ என்ற பாடல் அரங்கத்தினரையும், பார்வையாளர்களையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஜி.வி பிரகாஷ் இசையில் ’அசுரன்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் சைந்தவிக்கு பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: