பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் வரும் செய்தியில் உண்மையில்லை - குஷ்பு விளக்கம்

பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் வரும் செய்தியில் உண்மையில்லை - குஷ்பு விளக்கம்

குஷ்பு

மயிலுக்கு உணவளிக்கும் பிரதமரால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சாடினார்.

 • Share this:
  பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் வரும் செய்தி, வதந்தி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

  ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெரம்பூரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மயிலுக்கு உணவளிக்கும் பிரதமரால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை என சாடினார்.

  ALSO READ |  லடாக்கில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. இன்னும் இந்த வருஷம் என்னெல்லாம் பாக்கணுமோ.. இணையவாசிகள் புலம்பல்.

  இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பின்னர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தான் பாஜகவில் இணைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்தார்.
  Published by:Sankaravadivoo G
  First published: