பொள்ளாச்சியில் ரூ.8 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சிறுவர் பூங்கா நிறைவடையும் தருவாயில் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னை நகரம் என்றழைக்கப்படும் பொள்ளாச்சி பகுதியில் இயற்கை சார்ந்த பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் ஆழியார், டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக பொள்ளாச்சி நகராட்சி சார்பில் பொதுமக்களை கவரும் விதமாக அனைத்து அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பொள்ளாச்சி ஜோதி நகரில் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ 8 கோடி செலவில் அம்மா சிறுவர் பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி
Also Read:
மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு
குழந்தைகளை கவரும் வகையில் தண்ணீர் பவுண்டேஷன்கள் சறுக்கல், ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள், நீச்சல் குளம் குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் வகையில் மரங்களால் வேயப்பட்டது போல் கூடாரங்கள் கட்டப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி
மேலும் பூங்காவின் நுழைவாயில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு சுவர்களில் தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை நினைவு கூறும் விதமாகவும் விவசாயத்தையும் , பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கில்லி, கபடி போன்ற விளையாட்டுக்களை பற்றியும் பாரம்பரிய இசைக் கருவிகளான மிருதங்கம் , தபேலா, வீணை, போன்ற கருவிகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி நகர பகுதியில் பிரமாண்டமான பூங்கா கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் சக்திவேல், பொள்ளாச்சி உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.