சேலத்தில் விதிகளை மீறி திறந்திருந்த நகைக் கடைக்கு ரூ.5000 அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நகைக்கடை

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து திறந்திருந்த கடைக்கு அபராதம் விதித்துள்ளனர்.

  • Share this:
சேலத்தில் விதிகளை மீறி திறந்திருந்த நகைக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து கடையை திறந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.

கொரொனா நோய் தொற்று இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

அரசு விதிகளை மீறி சேலம் மாநகர் குகை ரோட்டில் உள்ள ஓவியா ஜூவல்லரி என்ற நகைக்கடை திறக்கப்பட்டு, நகை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து திறந்திருந்த கடைக்கு ரூ.5,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர் ரசீது தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தொடர்ந்து கடை திறக்கப்பட்டு இருந்தால் கடையை பூட்டி சீல் வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 
Published by:Esakki Raja
First published: