என்ன சொல்ல போகிறாய் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதற்கு பின்னர், தற்போது நடிகர் அஷ்வினின் சமூக வலைதளப் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் அஷ்வின். இவர் இதற்கு முன்பாக குறும்படங்கள், ஆல்பங்கள் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். இதன் வழியே அவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கு அந்த படத்தின் ஆடியோ லான்ச்சில் அஷ்வின் செய்த சம்பவமே காரணமாக அமைந்து விட்டது. ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அஷ்வின், 'எனக்கொரு பழக்கம் இருக்கிறது. இயக்குனர்களிடம் கதை கேட்கும்போது கதை பிடிக்காவிட்டால் நான் தூங்கி விடுவேன். அப்படி சுமார் 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். என்னை நம்பி திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அவர்களுக்காக நல்ல படம் கொடுக்க விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க -
இயக்குநர்களை அவமதித்தாரா குக் வித் கோமாளி அஸ்வின்?
இதில் 40 கதை கேட்டு தூங்கியது தொடர்பான அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி மீம்ஸ் உலகின் புதிய ஹீரோவாக அஷ்வின் மாறியிருந்தார். வாரக்கணக்கில் மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை நெகடிவ் புரொமோஷன் செய்ததால், என்ன சொல்லப் போகிறாய் படக்குழுவும் ஆடிப் போயிருந்தது.
இதையும் படிங்க -
’என்ன சொல்ல போகிறாய்’ பட நடிகை தேஜு அஸ்வினியின் லேட்டஸ்ட் படங்கள்..
இந்நிலையில் கடந்த 13-ம்தேதி வெளியான என்ன சொல்ல போகிறாய் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஒருவேளை அஷ்வின் ஆடியோ லான்ச்சில் பங்கேற்காமல் இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் அவருக்கும், படத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கருதப்படுகிறது.
தற்போது, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அஷ்வின், 'பழிக்குப் பழியா? இல்லை. நானே பெரிய சோம்பேறி. நான் சும்மா உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கப் போகிறேன். கர்மா உங்களை பழி தீர்க்கட்டும்' என்று கூறியுள்ளார். இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதில் யாரை பழிக்குப் பழி வாங்கப் போகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.