விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்ய தயார்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்...

விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்ய தயார்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்...

விவசாயிகளுக்காக ஆட்சியை தியாகம் செய்ய தயார்: முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  • Share this:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பா.ஜனதா அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் 3 புதிய வேளாண் சட்டங்களை  நிறைவேற்றியுள்ளது. இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக்கூறி காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் நாடு  முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அதில் புதுச்சேரியில் மட்டும் இன்று 8 இடங்களில்  போராட்டம் நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமை தபால்நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.

அப்போது பேசிய அவர்,மோடி அரசை முழுமையாக எதிர்க்க தயாராக இருங்கள். ஆட்சியை விட கட்சிதான் முக்கியம். விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் பரவாயில்லை என்று பேசினார்.

மேலும் படிக்க...வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதேபோல உழவர்கரை, வில்லியனூர், திருக்கனூர், பாகூர், தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய 8 இடங்களில் காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published: