அயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவது குறித்து, ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில்: ராவணன் கோயில் பூசாரி மகிழ்ச்சி
ராவணன்
  • Share this:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது.

ராமாயணத்தில் ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்தி செல்வதாகவும், ராவணனை ராமர் கொன்றுவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அரக்கராக அறியப்படும் ராவணன் இலங்கை அரசனாக கூறப்பட்டாலும், அயோத்தியிலிருந்து சுமார் 650 கிமீ தொலைவில் உள்ள கவுதம்புத் நகர் மாவட்டம் பிஸ்ராக் எனும் இடத்தில் பிறந்ததாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். அங்கு ராவணனுக்கு கோயிலும் கட்டப்பட்டு வணங்கப்படுகிறது.

மகந்த் ராம்தாஸ் என்பவர் ராவணன் கோயிலுக்கு பூசாரியாக இருக்கிறார். இவர் ராமர் கோயில் கட்டுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அடிக்கல் நாட்டும் விழா முடிந்ததும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும், ராவணன் இல்லையென்றால் ராமரை யாரும் அறிந்திருக்க முடியாது என்றும், ராமர் இன்றி ராவணனை யாருக்கு தெரிந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading