N-95 க்கு இணையான ஆயுர்வேதிக் மாஸ்க் தயாரித்து அசத்தி வரும் பொறியியல்  மாணவர்

ஆயுர்வேத மாஸ்க்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் N-95 க்கு திறன் கொண்ட ஆயுர்வேதிக் முக கவசங்களை தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கி ரசாயன பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் அசத்தி வருகிறார்.

  • Share this:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நாகய்யா செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜா(47). இவரது மகன் சஜீத்(19). திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் BTec ரசாயன பொறியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கொரொனா தாக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடி விட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக சஜித் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது முகக் கவசம் தொடர்ச்சியாக அணிவதால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுவதை உணர்ந்த சஜித் சுவாச மண்டலத்தில் சிரமம் ஏற்படுத்தாத வகையில்   ஆயுர்வேத முறையில் புதிய முக கவசத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக பல புத்தகங்களைப் படித்து மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொண்டு இறுதியில் 16 வகையான மூலிகைகளைக் கொண்டு சுவாசக் கோளாறுகளை நீக்க கூடிய ஆயுர்வேத முக கவசத்தை தயாரிக்க பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார்.

இதற்காக, சுவாசக்கோளாறுகளை நீக்கும் அதிமதுரம்,சிந்தில் கொடி,விஷ்ணுகிராந்தி, பர்படாகம்,புதினா, துளசி,கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்ளிட்ட 16 மூலிகைகளை கொண்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகளை நாட்டு மருந்து கடைகளுக்கு வழங்கும் மொத்த விற்பனையாளர்களிடம்  தேவையான மூலிகைகளை வாங்கி அதை வைத்து குறைந்த அளவிலான முகக்கவசங்களை தயாரித்து பயன்படுத்துவதற்கு முன்பு SOUTH INDIAN TEXTILES RESEARCH மையத்திற்க்கு சோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இந்த சோதனையில் ஆயுர்வேத மூலிகைகளை கொண்டு தாயாரிக்கப்பட்ட முகக்கவசத்தின் சோதனை முடிவுகள் முக கவசம் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் வரையறையின் படி 20 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டருக்கு குறைவாக உள்ள முகக் கவசங்கள் பொதுமக்கள் அணிய ஏற்றது என கூறும் அந்த மாணவர் தான் தயாரித்த முக கவசம் 7.659 பாஸ்கல் ஸ்கொயர் சென்டிமீட்டர் புலிகளை பெற்றுள்ளதாகவும் இது N-95க்கு  இணையான புள்ளிகள் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இது 88.82 சதவீத ஆன்டிவைரல் ஆக்டிவிட்டி என சான்று பெற்றுள்ளதாக தெரிவித்தார்எ இதனைத் தொடர்ந்து இந் ஆய்வு நிறுவனத்தில் இருந்தும் முறையான ஆவணங்களை பெற்றுக் கொண்ட இளைஞர், ஆயுர்வேத முறையில் முக கவசங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். தனது தந்தையின் உதவியோடு வீட்டில் உள்ள சஜீத், கடந்த இரு மாதங்களாக ஆயுர்வேத முகக்கவசங்களை அதிக அளவில் தயாரித்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.

Also Read : 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு திட்டம் என தகவல்

மேலும் நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் என கொரோனா நேரத்தில் பணியாற்றுவோருக்கு நாள்தோறும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி வருகிறார். துணியாலான இந்த முகக்கவசத்தை மூலிகைகள் அடங்கிய சிறு குப்பி மூக்கிற்கு அருகில் வைக்கப்படுகிறது. இந்த குப்பிகள் நிரப்பப்பட்டுள்ள 16 மூலிகைகள் அடங்கிய கலவையை சுவாசிக்கும் போது  இருமல், சளி, கபம், தொண்டை வலி, உள்ளிட்ட சுவாசக்கோளாறுகள் ஆகியவை நீங்குவதோடு, புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும்  சுவாசிக்க எளிமையாக உள்ளதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் சுவாசக்கோளாறு இன்றி இந்த முக கவசத்தை அணியலாம் என அதை தயாரித்த இளைஞர் தெரிவிக்கிறார்.

மேலும் நம் உள்ள கவசத்தை துவைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் எனவும் அதில் உள்ள 16 வகை மூலிகை பொருட்களை வீணாக்காமல் வேதி பிடிக்க பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.

செய்தியாளர் : சிவ கருணாகரன்
Published by:Vijay R
First published: