• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • Share this:
    மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தைச்சேர்ந்த, மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிகாலம் முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 26 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, ஏற்கெனவே எம்.பி.யாக இருக்கும் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. கூட்டணியில் தேமுதிக தங்களுக்கு ஒரு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், கட்சி தலைமை ஓரிரு நாளில் முடிவை அறிவிக்கும் என தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: