ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்றிரவு விசாரணை..!

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்றிரவு விசாரணை..!

நளினி

நளினி

Chennai | நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்றிரவு விசாரணைக்கு வரவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.

  பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற 6 பேரும் தங்களை விடுதலை செய்ய கோர முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  ' isDesktop="true" id="830027" youtubeid="KVrRIZLt8n0" category="live-updates">

  Also see... கோவை கார் வெடிப்பு... ஜமீஷா முபீன் வீட்டில் ஐஎஸ் கொடியின் வடிவம்

  இந்நிலையில் நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று இரவு விசாரணைக்கு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செயதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Nalini, Rajiv Gandhi Murder case, Supreme court