ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

ரஜினிகாந்த் கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திவிட்டார் - பசவராஜ் பொம்மை

ரஜினிகாந்த் கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திவிட்டார் - பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த், “புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை” என்றார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கன்னடத்தின் மீதான தனது அன்பை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

  கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான இவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46.

  புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஃபிட்னெஸில் ஆர்வம் மிகுந்த அவர், மாரடைப்பால் மறைந்தது ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமாரின் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநிலத்தின் உயரிய விருதான, கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

  இந்த விருதை வழங்க, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்தது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த். நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார். இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்கினர்.

  சீரியல் நடிகரின் மனைவி உயிரை பறித்த பேலியோ டயட்... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது இதுதான்!

  நிகழ்வில் கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த், “புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை” என்றார். அதோடு, ஜாதி மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று கூறியதுடன், வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கு நன்றி, எனக் குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பசவராஜ் பொம்மை, “மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடகா ரத்னா' விருதை வழங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth