ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் - ஷங்கர் - AVM கூட்டணியில் சிவாஜி-2 உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அந்தப் படம் வெளியான போது இது ஷங்கர் திரைப்படம் போல் இல்லை, ரஜினிகாந்தின் திரைப்படம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி முழுக்க முழுக்க ஷங்கரின் திரைப்படம் என கூறினார்.
இந்த விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் சிவாஜி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தமிழ் திரைப்பட ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கலந்துகொண்டு படக்குழுவினரை பாராட்டினார்.
இதையும் படிங்க - விக்ரம் படத்தின் வசூலை மேடையில் ஓபனாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்
சிவாஜி படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் எந்திரன், 2 பாயிண்ட் ஓ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர். அந்தப் படங்களும் வசூலில் சாதனை படைத்தன.
மூன்று படங்களில் பணியாற்றிய ரஜினி ஷங்கர் மீண்டும் இணையாமல் இருந்தனர். அதேபோல் சிவாஜி திரைப்படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமும் சினிமா தயாரிப்பில் இருந்து கடந்த சில வருடங்களாக ஒதுங்கி உள்ளது. இந்த நிலையில்தான் சிவாஜி திரைப்படத்தின் 15ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
ரஜினிகாந்தின் படம் வெளியான ஆண்டுகளை ரசிகர்கள் கொண்டாடினாலும் ரஜினிகாந்த் பெரிதாக அதில் பங்கெடுக்க மாட்டார். ஆனால் சிவாஜி படத்தின் 15-ம் ஆண்டு நிறைவையொட்டி ரசிகர்களுக்கு நன்றி கூறினார். அது மட்டுமில்லாமல் பட குழுவினரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் காரணமாக சிவாஜி படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க - வீக் எண்ட் பார்ட்டியா? யுவன் இசையில் இந்த பாட்டோட கொண்டாடுங்க...
மேலும் சமூக வலைதளங்களில் ஏ.வி.எம் நிறுவனம் மீண்டும் சினிமா தயாரிப்பிற்கு வர வேண்டும், அது சிவாஜி-2 மூலம் நடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனம் 15 Years of Sivaji என்ற ஹேஷ்டேக்கில் சிவாஜி படத்தின் தகவல்களை பகிர்ந்தது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் ஆகியோர் 20 நாட்களில் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். அதில் ஒரு புகைப்படத்தை ஷங்கர் கடந்த 15ம் தேதி பகிர்ந்தார்.
அந்த சந்திப்பில் இருவரும் அடுத்தப்படத்தை பற்றி பேசியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அது சிவாஜி-2 படமாக இருக்கலாம் எனவும் ரஜினிகந்திற்கு நெருக்கமானவர்கள் கூறிகின்றனர்.
இதை உறுதி செய்யும் விதமாக தற்போது ஏ.வி.எம் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சரவணன் மற்றும் குகன் ஆகியோரும் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர்.
ரஜினிகாந்த் சமீபமாக இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேசமயம் ஷங்கர் போன்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
எனவே, ரஜினிகாந்தின் 170 அல்லது 171வது படத்தை ஷங்கர் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கு பிறகே சிவாஜி-2 படத்திற்கான இறுதி வடிவம் கிடைக்க வாய்ப்புள்ளது
நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக செந்தில்ராஜா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.