பிரமாண்டமான கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், கடற்கரை, பண்ணை வீடு, ஆலயங்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட இடங்களில்தான் பெரும்பான்மையான திருமணங்கள் நடக்கும். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது மருத்துவமனையில் திருமணம் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறீர்களா அல்லது அதைப்பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? ராஜஸ்தானில் இருக்கும் கோடா எம்பிஸ் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
திருமண ஏற்பாடுகள் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வந்தாலும், ஒரு சில ஏற்பாடுகளில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடும். அப்படியொரு சம்பவம்தான் இங்கு நடந்துள்ளது. பெரிய பிரச்சனை நடந்தும் கூட திருமணத்தை நிறுத்தாமலேயே மணமகன் மணமகளை மருத்துவமனைக்கு சென்று திருமணம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கன்ஜ்மண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் பங்கஜ் ரத்தோர். இவர் மது ரத்தோர் என்ற பெண்ணை திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டு வந்திருந்தன.
கடந்த வார இறுதியில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டு வந்த நிலையில், உறவினர்கள் நண்பர்களுக்கு என்று அந்த ஊரில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு திருமணத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக மணமகள் படிக்கட்டில் இருந்து விழுந்து, உடல், இரண்டு கைகள் மற்றும் கால்களில் மல்டிபிள் ஃபிராக்சர் ஏற்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் தலையிலும் காயம்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் அடிபட்ட நிலையில் மணப்பெண் மது உடனடியாக கோட்டாவில் இருக்கும் MBS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார்.இவ்வாறு விபத்து நடந்த உடனேயே திருமணத்தை எவ்வாறு நடத்துவது என்பதைப் பற்றி மணமகன் மற்றும் மணமகள் தரப்பு குடும்பத்தினர் பேச்சு வார்த்தை நடத்தியபொழுது மணமகன் மருத்துவமனையிலேயே மணமகளை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாக விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இரண்டு குடும்பங்களுமே இதை ஏற்றுக்கொண்ட நிலையில், மருத்துவமனையிலேயே திருமணத்திற்காக ஒரு அறையை முன்பதிவு செய்து, சாதாரணமாக திருமணம் நடப்பது போல அனைத்து சடங்குகளும் நடந்தது. அதற்கு பிறகு ராஜஸ்தானிய முறைப்படி தாலி கட்டும் வைபவம் நடந்தேறியது. மணமகளால் நடக்க முடியாது என்பதால், அக்னியை சுற்றி ஏழு முறை வலம் வரும் பெராஸ் என்ற சடங்கு மட்டும் நடைபெறவில்லை.
திருமணத்திற்கு முன்பு இதுபோன்ற அசம்பாவிதம் ஏதேனும் நேரிட்டால் பல குடும்பங்கள் திருமணத்தை நிறுத்தி விடும். இது ஒரு கெட்ட அறிகுறி அல்லது மோசமான அறிகுறி என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மணமகன் அவ்வாறு நினைக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த மதுவை திருமணம் செய்துள்ளார் மணமகன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.