ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

கால்பந்து உலக கோப்பை : புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?

கால்பந்து உலக கோப்பை : புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா தொற்று காரணமாக பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?

ஆசிய கண்டங்களில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறுவதே புதுமையாக இருந்தாலும் கத்தார் உலகக் கோப்பையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியத்துவம் பெற்றிருப்பது மகளிர் நடுவர். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆண்கள் மட்டுமே நடுவர்களாக செயல்பட்டு வந்துள்ள நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் முதல் முறையாக பெண்களும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். 36 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலில் மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

Yamashita Yoshimi, Salima Mukansanga மற்றும் Stephanie Frappart ஆகிய மூன்று பெண் நடுவர்கள் ஏற்கனவே ஐரோப்பா தேசிய கோப்பை மற்றும் ஆப்ரிக்க தேசிய கோப்பை போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்ட அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் கால்பந்து விளையாட்டில் புதிய புரட்சியை உண்டாக்கி சென்றுள்ளது. மூன்று மாற்றுவீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்ட நிலையில் கொரோனா காலத்தில் ஐந்து மாற்றுவீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அந்த நடைமுறையே உலகக்கோப்பை கால்பந்து தொடரிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக 23 வீரர்கள் கொண்ட அணிக்கு பதிலாக 26 வீரர்களை உள்ளடக்கிய அணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: FIFA உலகக் கோப்பை இன்று தொடக்கம் : எங்கே, எப்படி நேரலையில் பார்க்கலாம்?

செமி ஆட்டோ மேட்டேட் ஆஃப் சைட் தொழில்நுட்பம் (semi-automated offside technology) முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மைதானத்தை சுற்றி 12 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கப்படுவதுடன் மைதானத்தில் இருக்கும் 22 வீரர்களையும் எலக்ட்ரானிக் சிக்னல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

தடுப்பாட்டக்காரரின் ஆரம்ப புள்ளியையும், பந்தை உதைக்கும் வீரரின் முடிவுப்புள்ளியையும் ஆராய்ந்து உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கள நடுவருக்கு சிக்னல் வழங்கப்படும். நீண்ட காலமாக கால்பந்து விளையாட்டில் நீடித்துவரும் ஆஃப்சைட் சண்டைக்கு இந்த தொழில்நுட்பம் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது.

Published by:Arunkumar A
First published:

Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar