புதுச்சேரியில் இன்று கடலில் கறுப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து நேற்று இரவு அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் மீனவ பஞ்சாயத்தார் தரப்பில், இந்த அறிவிப்பு உள்நோக்கத்தோடு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மஞ்சள் கார்டு வைத்துள்ளவர்கள் வருமான வரி சான்றிதழும், ஒரு வீட்டில் ஒருவருக்கு மேல் ஓய்வூதியம் பெற்றால் தடைக்கால நிவாரணம் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என மீனவ பஞ்சாயத்தார் அறிவித்தனர். இதன்படி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகம் முதல் காந்தி சிலை வரையிலான பகுதியில் கடலில் மீனவர்கள் படகுடன் திரண்டனர்.
விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் என 500க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போõட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை சாலையில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி மற்றும் மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மீனவர்களின் போராட்டத்தால் கடற்கரை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் வரை நடந்தது.
.
மேலும் படிக்க...
ஒரு மணிநேரத்துக்கு 800 பேருக்கு தரிசனம்: திருப்பதியில் பக்தர்களுக்கான அனுமதி எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு..
புதுவை மீனவர்கள் அனைவருக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 7,500 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் கருப்புகொடி ஏந்தி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.