• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • கேரள அதிவேக ரயில் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு

கேரள அதிவேக ரயில் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கேரள அதிவேக ரயில் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

  • Share this:
இது குறித்து புதுச்சேரி முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில். ‘‘மாஹே பகுதியில் அதிகவேக ரயில் திட்டத்தை கொண்டுவர கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை எடுக்கின்ற சமயத்தில் மாஹே பகுதியில் பள்ளூர் வழியில் ரயில் திட்டம் செல்வதாக இருந்தது. முன்னாள் அமைச்சர் வல்சராஜ், ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் எனக்கு கடிதம் எழுதி, பள்ளூர் பகுதியில் ரயில் திட்டம் செல்வதன் மூலமாக பள்ளூர் பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

ஆகவே, கேரளா அரசானது ரயில் பாதை திட்டத்தை கேரளா வழியாக செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், கேரள அரசு இந்த ரயில்வே திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக, குறிப்பாக மாஹே பகுதியில் ரயில்வே திட்டம் செல்வதற்கு அவர்கள் முனைகின்ற சமயத்தில் எங்களுடைய அனுமதி எதையும் பெறவில்லை.

புதுச்சேரி அரசும் அவர்களுக்கு எந்தவித ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், அவர்களே தன்னிச்சையாக இந்த ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு முடிவு எடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பி இருந்தார்கள். நான் ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, அதன் மூலமாக கேரள மாநிலத்தில் செல்கின்ற அதிவேக ரயில்வே திட்டம் மாஹே பகுதியில் வருவதால் பள்ளூர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

கேரள அரசானது அவர்களுடைய இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன். இதனை அவரும் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்தார். மத்திய அரசு உத்தரவுபடி டெல்லியை போல் நிதி அதிகாரத்தை 2019 ஏப்ரலில் பகிர்ந்து அளிப்பதாக துணைநிலைஆளுநர் அறிவித்திருந்தார். அதனை அவர் செய்யவில்லை.அதற்கு மாற்றாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும்  கருத்து வேறுபாடு இருக்கிறது. அதனை மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆளுநர் எழுதியுள்ள கடிதமே தவறான ஒன்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, துறை செயலர்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவை மீறி ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கிறது.

இது மத்திய அமைச்சரவை, உள்துறை, குடியரசுத் தலைவரை அவமதிப்பதாகும். ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்ததை இனிமேல் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காலம் தாழ்த்தி எங்களுடைய அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கோப்பு சென்றால் தேவையில்லாமல் கேள்வி கேட்டு முட்டுக்கட்டை போட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்.

இதுசம்பந்தமாக இரண்டு தினங்களுக்கு முன்பு  அமைச்சரவையில் பேசினோம். ஆளுநரின் எண்ணம், இந்த நிதி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க கூடாது என்று காலம் தாழ்த்தி வருகிறார். ஆகவே, இதுசம்பந்தமாக உள்துறை அமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கலந்தாலோசித்தோம்.

இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்போம். ஆளுநரின் மக்கள் விரோத போக்காலும், அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் எங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுகிறது என்பது மக்களுக்கு தெரியும்” என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பிப்ரவரி மாதம் வரை புதுச்சேரி மாநில அரசுக்கு தேவையான இழப்பீட்டை கொடுத்துள்ளதாக கூறினார்.  மேலும் அவர் மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான நிதியை கொடுக்கவில்லை. இதனால் மாநிலம் வருவாய் இல்லாமல் தத்தலிக்கிறது. வியாபாரிகள் தங்களுடைய வரவு செலவு கணக்கை செலுத்துவற்கான காலத்தை நீட்டித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் மாநிலம் மிகப்பெரி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக இந்த மூன்று மாதத்துக்கான இழப்பீட்டை சரிசெய்ய வேண்டும். அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் எங்களுடைய மாநிலம் பாதிக்கப்படும் என்று வலியுறுத்தி கூறியதாக அவர் சென்னார். அதனை அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.

இப்போது மத்திய அரசும், மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. என்னோடு பல மாநில நிதியமைச்சர்கள், துணை முதல்வர்கள் இந்த கருத்தை வலியுறுத்தி மத்திய அரசு இந்த நேரத்தில் மாநிலங்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக கொரோனா தொற்றுள்ள இந்நேரத்தில் அதனை தடுத்து நிறுத்த மாநில அரசுகள் முனைந்து செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது என்பதை தெரிவித்தனர். நிதியமைச்சர் இது சம்மந்தமாக நல்ல முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கிறேன் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: