• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • புதுச்சேரியில் கொரோனா பாதித்து ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த நபர்

புதுச்சேரியில் கொரோனா பாதித்து ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த நபர்

புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் அடைந்து வந்த நபர், திடீரென ஒரு மணி நேரத்தில் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுவையில் மேலும் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

    149 பேர் சிகிச்சை பெறுவதாகவும், 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மூன்று தொகுதிகளுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

    Also read... கோவையில் பெண்கள் உட்பட மேலும் 37 பேருக்கு தொற்று..

    தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, நல்ல உடல்நிலையில் இருந்த 52 வயது நபர், கொரோனாவுக்கு ஒரே மணிநேரத்தில் உயிரிழந்திருப்பதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: