புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் புதுச்சேரி முதலவர் நாராயணசாமி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார். முதல்கட்டமாக காய்கறி அங்காடி மூடப்பட்டு பேருந்து நிலையத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.
அடுத்ததாக இன்று முதல் பத்து நாட்களுக்கு கடற்கரை சாலையில் நடைபயிற்சி தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் மார்ச் 19ம் தேதி முதல் 75 நாட்களுக்கு மூடப்பட்ட கடற்கரை சாலையில் மக்கள் நடை பயிற்சிக்காக கடந்த 6ம் தேதி திறக்கப்பட்டது.
ஆனால் இங்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி மேலும் 10 நாட்களுக்கு கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் அவர்களிடம் தெரிவித்தனர்.இதனால் அவர்கள் அருகில் உள்ள சாலையில் நடை பயிற்சியை தொடர்ந்தனர்.
இதே போல் கடைவீதிகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அதிகளவு நடமாடுவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் இன்று காலை முதல் அனைத்து கடைகளும் காலை 6:00 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே விற்பனை செய்யவேண்டும், பால் பூத்துக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதி, மருந்து கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் காலை 6 மணி முதல் 2 மணிவரை அமர்ந்து உண்ணவும், இரவு 8 மணிவரை பார்ச்சலுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசம் அணியாமல் வந்தால் 100 ரூபாய் என்ற அபராதத்தை 200 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் இந்த அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.