ஹோம் /நியூஸ் /JUST NOW /

மின் கட்டணம் செலுத்த கூடியிருந்த பொதுமக்கள் - உடனடி ஆக்‌ஷனில் இறங்கிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மின் கட்டணம் செலுத்த கூடியிருந்த பொதுமக்கள் - உடனடி ஆக்‌ஷனில் இறங்கிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் மக்கள் பிரச்னைக்கு களத்திலேயே நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரி  தவளக்குப்பத்தில் நடைபெற்ற உள் விளையாட்டு  அரங்கம் பூமி பூஜை விழாவிற்கு சென்று திரும்பிய முதலமைச்சர் நாராயணசாமி, வழியில் தானம்பாளையம் கிராமத்தில் மின் துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை பார்த்தார்.

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த அவர், பொதுமக்களிடம் ஏன் இவ்வளவு கூட்டமாக இருக்கிறீர்கள்..? என்று கேட்டார். அதற்கு அங்கு கூடியிருந்த மக்கள், பணம் வசூலிக்க ஒருவர் மட்டுமே இருப்பதால் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

உடனே முதல்வர்,  தன் கைப்பேசி மூலமாக மின் துறை தலைமைப் பொறியாளரை தொடர்புகொண்டு இந்த கொரானா நோய்த்தொற்று காலத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க கூடுதல் பணியாளர்களை நியமித்து  விரைவாக பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் அவர்களை  சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து இருக்குமாறும் கூறினார்.

மேலும் படிக்க...பப்ஜி கேம் மோகம் - ஸ்மார்ட்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை

மக்கள் பிரச்னைக்கு  உடனே நடவடிக்கை எடுத்த    முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தனக்கு நன்றி செலுத்துவதை விட  சமூக இடைவெளியுடன் மின் கட்டணம் செலுத்துங்கள் அதுவே மிகப்பெரிய நன்றி என கூறிட்டு முதல்வர் நாராயணசாமி புறப்பட்டார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Narayana samy, Puducherry