புதுச்சேரி வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி கிராமத்திலுள்ள கங்கைவராக ஈஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு யாகம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வழிபட்டார்.
புதுச்சேரியை சேர்ந்த சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து 10 ஆயிரம் மகா மிருக்த்திஜெய மந்திரத்தில் சிறப்பு யாகத்தில் முழங்கினார்கள். உடலில் உள்ள நோய்களை அகற்றும் பலம் பெற்ற 94 விதமான மூலிகைகள் கொண்டு இந்த யாகம் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க...
80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு; உளவியல் பயிற்சி அளிக்க திட்டம் - திருச்சி டிஐஜி நடவடிக்கை
காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு இணையான சக்தி பெற்ற இந்த திருக்காஞ்சி கங்கைவராக ஈஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினால் எந்த நோயும் விலகும் என்பது இப்பகுதி மக்கள் பின்பற்றப்படும் ஐதீகமாக விளங்குகிறது.
இதனையொட்டி இன்று கொரோனாவில் இருந்த மக்கள் விடுபட்டு நலம் பெற சிறப்பு யாகம் நடத்தப்பட்டதாக சிவாச்சாரியார் சரவணன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Narayana Swamy, Puducherry, Puthucherry cm