• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • டீசரை வெளியிட்ட பின் அமைதியான பப்ஜி: இந்தியாவில் ரீ எண்ட்ரி எப்போது?

டீசரை வெளியிட்ட பின் அமைதியான பப்ஜி: இந்தியாவில் ரீ எண்ட்ரி எப்போது?

பப்ஜி

பப்ஜி

Tencent Gaming என்ற சீன தாய் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பப்ஜி இந்தியாவில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டது. அதே நேரத்தில் Krafton என்ற தென் கொரிய நிறுவனத்திற்கு PUBG Corp கைமாறியது. பப்ஜி அடிப்படையிலேயே மற்றொரு புதிய கேமை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் ஆயத்தமாகி வந்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம், மீண்டும் ரீ எண்ட்ரீ ஆவது எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லை பிரச்னை காரணமாக சீன வீரர்களின் மோதல் போக்கால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் சீன அரசுடனான உறவு சுமூகமாக இல்லை. அதே நேரத்தில் சீன மொபைல் செயலிகளின் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி டிக் டாக், பப்ஜி, ஹலோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது, அத்துடன் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. இந்த ஆப்கள் இந்தியாவில் பரவலாக வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்தியாவில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பரில் தடை செய்யப்பட்ட பப்ஜி இந்திய அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்து மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வருவோம் என அதன் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தது. coming soon என டீசர் ஒன்றையும் கடந்த நவம்பரில் பப்ஜி வெளியிட்டது.

Tencent Gaming என்ற சீன தாய் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பப்ஜி இந்தியாவில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டது. அதே நேரத்தில் Krafton என்ற தென் கொரிய நிறுவனத்திற்கு PUBG Corp கைமாறியது. பப்ஜி அடிப்படையிலேயே மற்றொரு புதிய கேமை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் ஆயத்தமாகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டது. ஆனால் டீசர் வெளியீட்டிற்கு பின்னர் அந்நிறுவனம் அமைதியாகிவிட்டது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. பப்ஜி நிறுவனத்தினருடனான ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசின் அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பப்ஜியின் பழைய வடிவத்திற்கோ அல்லது புதிய பரினாம விளையாட்டிற்கோ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் PUBG போன்ற விளையாட்டுகள் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் இது வன்முறையை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது குழந்தைகளின் மனநிலையை மோசமாக பாதிக்கிறது எனவும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது போன்ற காரணங்களால் கடந்த தீபாவளிக்கு மீண்டும் இந்தியாவில் ரீ எண்ட்ரி கொடுப்போம் என அறிவித்த நிலையில் 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் தடை விலக்கப்படாததால் பப்ஜி இந்தியாவில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மங்கிப் போய்விட்டதாகவே தெரிகிறது. மேலும் பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகமான FAU-G கேம் அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: