கொரோனா பாசிட்டிவ்... தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரித்விராஜ்

கொரோனா பாசிட்டிவ்... தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரித்விராஜ்

பிரித்விராஜ்

கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

 • Share this:
  பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

  படத்தின் இயக்குநரான டிஜோ ஜோஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

  இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், எல்லோருக்கும் வணக்கம்! அக்டோபர் 7 ஆம் தேதி முதல் டிஜோ ஜோஸ் அந்தோனியின் “ஜன கண மனா” படப்பிடிப்பில் இருக்கிறேன். கோவிட் விதிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எங்களிடம் கடுமையான நெறிமுறைகள் இருந்தன.   

  விதிமுறைப்படி, அனைவருமே படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சோதிக்கப்பட்டனர்.  துரதிர்ஷ்டவசமாக, இந்த முறை சோதனை முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. எனக்கு அறிகுறிகள் இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் நன்றாக இருக்கின்றேன். அனைவரின் அன்பிற்கும் நன்றி என கூறியுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: