சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் சுகுமார குருப், முரளி சங்கர் குப்புராஜீ, மஞ்சுளா ராமராஜு, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன் ஆகிய 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

  இவர்களில் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் மனைவி ஆவார்கள். தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உள்ள நிலையில், இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படும் பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: