நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா தாகூருக்கு இடம்! காங்கிரஸ் கண்டனம்

நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா தாகூருக்கு இடம்! காங்கிரஸ் கண்டனம்
சாத்வி பிரக்யா சிங் தாகுர்
  • News18
  • Last Updated: November 21, 2019, 9:26 PM IST
  • Share this:
பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் சர்ச்சைக்குரிய எம்.பி பிரக்யா சிங் தாகூருக்கு இடமளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செயல்படும் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 மக்களவை உறுப்பினர்கள், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த குழு நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூரும் இடம்பெற்றுள்ளார். அது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் இருப்பவர் பிரக்யா தாகூர். நாடாளுமன்றத் தேர்தலின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு பாதுகாப்புக்குழுவில் இடம் அளித்தற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


Also see:

 
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்