பாப்கார்ன் சாப்பிட்டவருக்கு இதய அறுவை சிகிச்சை..! நடந்தது என்ன..?

ஈறுகள் சேதமாகி, இரத்தக் கசிவு, வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பாப்கார்ன் சாப்பிட்டவருக்கு இதய அறுவை சிகிச்சை..! நடந்தது என்ன..?
பாப்கார்ன்
  • News18
  • Last Updated: January 8, 2020, 12:40 PM IST
  • Share this:
தியேட்டர், படம் என்றாலே பாப்கார்னை தவிர்க்க முடியாது. படம் பார்க்க துணைக்கு நண்பர்கள் இல்லை என்றாலும் பாப்கார்ன் இல்லாவிட்டால் படமே பார்க்க முடியாது. இப்படி பாப்கார்ன் மீது தீரா காதல் கொண்ட ஒருவருக்கு நேர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நபர் இனி என் வாழ்நாளில் பாப்கார்னை தொடவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

41 வயதான ஆடம் மார்டின் என்பவர் தீயனைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். அவர் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார். பொதுவாக பாப்கார்ன் சாப்பிடால் சில துகள்கள் ஈறுகளில் சிக்கிக் கொள்ளும். அதுபோல் இவருக்கும் ஒரு துண்டு பல்லின் பின் பக்க ஈறில் சிக்கியுள்ளது. மூன்று நாட்களாக தொந்தரவாக இருக்க எடுக்க முயற்சித்துள்ளார். இதற்காக பல் குத்தும் குச்சி, பேனா முனை, ஒயர் கம்பி, சில இரும்பு கம்பிகளையும் பயன்படுத்தி எடுக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அவருடைய ஈறுகள் சேதமாகியுள்ளன. சில வாரங்கள் கடந்த நிலையில் அவருக்கு இரவு நேரத்தில் அதிக வியர்வை, தலைவலி, உடல் சோர்வு அதிகரித்துள்ளன. பின் தீவிரமான காய்ச்சலும் வர உடனே மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது மருத்துவர்கள் இதயத்தில் ஏதோ தொந்தரவு இருப்பதாகக் கண்டறிந்து எக்ஸரே , இரத்தப் பரிசோதனை எடுக்கச் சொல்லியுள்ளனர். பின் அவருக்கு சாதாரண காய்ச்சல் மாத்திரைகள் மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். சில நாட்கள் கழித்து காலின் கட்டை விரலில் இரத்தக் கட்டி வந்துள்ளது. அதனாலும் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் இதயத்தில்தான் பிரச்னை என மார்பகம் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவருடைய இதயம் கடுமையாக் பாதிக்கப்பட்டு சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பின் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு ; 7 மணி நேரம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இதயத்தின் பெருநாடி வால்வு (aortic valve) மாற்றப்பட்டு மிட்ரல் வால்வு (mitral valve) தொற்று நீக்கப்பட்டுள்ளது.

இறுதியாக மருத்துவர்கள் இதய உட்சவ்வு தொற்று காரணமாகவே அதுபோன்ற அறிகுறிகள் வந்ததாக கூறியுள்ளனர். அது இதய அறைகளைச் சுற்றிலும் இருக்கும் இதயத்தின் உட்சவ்வு. உட்சவ்வு தொற்று ஏற்பட்டதற்கு அவரின் ஈறுகள் சேதமானதுதான் காரணம் என்று கூறியுள்ளனர். எனவே பற்களில் ஏதேனும் சிக்கியிருந்தால் அதை இப்படி கம்பி, பேனா முனை என கண்டதையும் பயன்படுத்தாதீர்கள். அதனால் ஈறுகள் சேதமாகி இப்படியான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஈறுகள் சேதமாகி, இரத்தக் கசிவு, வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். வரும்முன் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்” என டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்