மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
முன்னதாக இவர் கடந்த 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சரானார்.
கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தமிழக பாஜக தலைவராகவும் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி வகித்துள்ளார்.
தீவிர ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் கொள்கைக்காக திருமணமே செய்துகொள்ளவில்லை. அரசியலுக்கு முன்னதாக வழக்கறிஞர் பதவியில் பொன்.ராதாகிருஷ்ணன் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் பார்க்க: கன்னியாகுமரி தொகுதி ஓர் சிறப்பு பார்வை
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.