27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் கொலை செய்த சிறுவன்
திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான 27 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் கொலை செய்த 17 வயது சிறுவன் போலீசிடம் சிக்கியுள்ளான்.
- News18 Tamil
- Last Updated: July 16, 2020, 5:39 PM IST
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி 27 வயதான இளம்பெண். இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஜூலை 12 ஆம் தேதி நண்பகல் கீரைக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் உறவினர்கள் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதை அடுத்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசாரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். காலையில் கீரைக்காடு வனப்பகுதியில் சென்று போலீசார் தேடினர். ஓடைக்கரையில் இளம்பெண் கொண்டு சென்ற அழுக்குத் துணிகள் அப்படியே கிடந்தன. அருகில் உள்ள காப்புக்காட்டுக்குள் சென்று பார்த்தபோது மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில், அவர் நிர்வாணமான நிலையில் சடலமாகக் கிடந்தார்.
அவர் அணிந்திருந்த பாவாடையால் அவருடைய வாய் கட்டப்பட்டு இருந்தது. உடலில் பல இடங்களில் ரத்த காயங்களும், கற்களால் தாக்கியதற்கான அடையாளங்களும் காணப்பட்டன. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இளம்பெண் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், அந்த பெண்ணின் கிராமைத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக அக்கப்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதை அடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 17 வயதான அந்த சிறுவன் 27 வயதான அந்த பெண்ணை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டுள்ளான்.
பாலியல் ரீதியாக அவரை அடையும் முயற்சியில் சில மாதங்களாக அவரை பின்தொடர்ந்து சென்று வந்துள்ளான். கடந்த 12 ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த பெண் காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் செல்வதை சிறுவன் பார்த்துள்ளான்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அவிழ்த்து விட்ட அவர், மொக்கசடையன் கோயில் அருகே உள்ள ஆற்று ஓடையில் பாவாடை மட்டும் அணிந்தபடி துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஆடு, மாடுகள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றுள்ளன. அதனைப் பார்த்த அவர், கால்நடைகளை விரட்டி விடுவதற்காகச் சென்றுள்ளார்.
Also read... ரேஷனில் அரிசி வாங்க 80 கி.மீ சைக்கிளில் பயணித்த முதியவர் - சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக சிக்கிய சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளர்.
ஆனால் சிறுவனின் ஆசைக்கு ஒத்துழைக்காத அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இளம்பெண் அலறி கத்தியுள்ளார். இதை அடுத்து அவர் அணிந்திருந்த பாவாடையை எடுத்து வாயில் வைத்து கட்டிய சிறுவன், மீண்டும் தாக்கியுள்ளான்.
சிறுவனின் ஆசைக்கு அந்த பெண் ஒத்துழைக்க மறுத்ததால் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார். ஆனால் நடந்த சம்பவத்தை அவர் வெளியில் சொன்னால் பிரச்னையாகிவிடும் என பயந்த சிறுவன் அருகில் கிடந்த கல்லை இளம்பெண்ணின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை அடுத்து 17 வயது சிறுவனை நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
ஜூலை 12 ஆம் தேதி நண்பகல் கீரைக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் உறவினர்கள் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதை அடுத்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசாரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். காலையில் கீரைக்காடு வனப்பகுதியில் சென்று போலீசார் தேடினர்.