பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்
ஜோகா (JOKA) - டரடாலா (Taratala) வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மோடியின் தாய் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார். இறைவன் தங்களுக்கு மன தைரியத்தை தர வேண்டுவதாக மம்தா தெரிவித்த போது, அதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தாய் இறந்த தினத்திலும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்....
தாயின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில், நாட்டின் 7வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹவுரா-ஜல்பைகுரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை நேரடியாக பிரதமர் தொடங்கி வைக்க இருந்த நிலையில், தாயார் மரணம் அடைந்ததால் காணொலியில் துவக்கி வைத்தார்.
பிரதமர் தாயார் மறைவு - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மௌன அஞ்சலி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையையடுத்து நம்மாழ்வார் நினைவு தினம் மற்றும் பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
பிரதமர் மோடியின் தாயார் மறைவு : குஜராத் செல்லும் இபிஎஸ், ஓபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவையொட்டி பிரதமருக்கு ஆறுதல் கூறுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்கிறார். கோவை விமான நிலையத்திலிருந்து 11.40 மணிக்கு அகமதாபாத் செல்கிறார், அவருடன் தம்பிதுரை மற்றும் வேலுமணி உடன் செல்கின்றனர். அதேபோல இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வமும் குஜராத் மாநிலம் செல்கிறார்