ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

போண்டா மணியிடம் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடிய பலே திருடன் கைது

போண்டா மணியிடம் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடிய பலே திருடன் கைது

நடிகர் போண்டா மணி

நடிகர் போண்டா மணி

Actor Bonda Mani | போண்டா மணியின் மனைவி போரூர் காவல்நிலையத்தில்  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் பிரத்தீவ்வை கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டாமணியிடம் ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ்(34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி மருத்துவமனையில் போண்டா மணிக்கு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்.  அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி மாதவி தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஷ் பிரித்தீவ்விடம் கொடுத்து மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

  மருந்து வாங்கி வர ராஜேஸ் பிரித்தீவ் சென்ற சிறிது நேரத்தில் சென்னை உம்முடி பங்காரு நகைக் கடையிலிருந்து மாதவியின் செல்போனுக்கு ரூ.1,04,941 மதிப்புள்ள நகை வாங்கியதாக மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து ராஜேஸ் பிரத்தீவ் தலைமறைவாகி விட்டார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

  இதையும் படிங்க: திருக்குறள் ஆன்மிக நூல்... மொழிபெயர்க்கும்போது ஜி.யு.போப் ஆன்மிக கருத்துகளை மறைத்துவிட்டார் - ஆளுநர் ஆர்.என்.ரவி

  இது குறித்து போண்டா மணியின் மனைவி போரூர் காவல்நிலையத்தில்  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் பிரத்தீவ்வை கைது செய்தனர். விசாரணையில்   அவர் தினேஷ். சிவராம குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல்வேறு பெயர்களில் பல ஊர்களில் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது கோவை மாவட்டம் கருமத்தூர், கோவை இரயில்வே போலீஸ், சென்னை எழும்பூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் இவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும்  காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published: