காராமணிக்குப்பம் புவன்கரே வீதியை சேர்ந்தவர் கோபாலன். எலக்ட்ரிஷியன். இவரது மனைவி ப்ரியா. நேற்று காலை ப்ரியா சைக்கிளில் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். புஸ்சி வீதி- எல்லையம்மன்கோவில் வீதி வழியாக வந்தபோது அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
இதனால் சைக்கிளில் இருந்து இறங்கி அதனை தள்ளிக்கொண்டு நடந்தவாரே செல்போனில் பேசிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ப்ரியாவிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
அப்போது எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த மற்றோரு இருசக்கர வாகனத்தில் மோதி செல்போனை பறித்த இருவரும் கீழே விழுந்தனர். இதனை கண்டவுடன் ப்ரியா தனது செல்போனை அவர்கள் பறித்து சென்றதாக கூறி கத்தியுள்ளார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு செல்போனை பறித்து சென்ற இருவருக்கும் தர்ம அடி கொடுத்து பிடித்தனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போனை பறித்த இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாலும், கொரொனா அச்சத்தாலும், அவர்கள் இருவரையும் கொரொனா பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.