மதுரை திருமங்கலம் அருகே சமத்துரவபுரத்தில் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்!

மதுரை திருமங்கலம் அருகே சமத்துரவபுரத்தில் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்!

திருமங்கலம்

கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததால் மதுரை திருமங்கலம் அருகே சமத்துவபுரத்தில் வசித்து வருவோர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சமத்துவபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்து தராததால் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

  திருமங்கலம் அருகே பேரையூர் தாலுகா குடிசேரி சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இதில் 100 வீடுகளில் 250 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் சமத்துவபுரத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது மேலும் தெரு விளக்கு இல்லாததால் சமத்துவபுரம் இருளில் மூழ்கி காணப்படுகிறது குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் யாருமே வரவில்லை தற்போது வேட்பாளர்கள் மட்டுமே ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

  கடந்த 20 ஆண்டு காலம் ஆகியும்  அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் மின்விளக்கு கழிவுநீர் கால்வாய் நியாய விலைக் கடை உள்ளிட்ட இதுவும் செய்துதர நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டுமானால் மூன்று கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளதால் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் ரேஷன் கடை சமத்துவபுரத்திற்கு மேடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

  அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை சமத்துவ மக்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

   

  திருமங்கலம் செய்தியாளர் சிவக்குமார்
  Published by:Arun
  First published: