ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

ரயிலில் தள்ளி மாணவியை கொலை செய்த வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரி சதீஷ் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

ரயிலில் தள்ளி மாணவியை கொலை செய்த வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரி சதீஷ் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவை கொலை செய்த சதீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பரங்கிமலை சதீஷ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு எட்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ்குமாரும் காதலித்து வந்த  நிலையில், சத்யாவின் பெற்றொர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யாவை, ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அக்டோபர் 14ஆம் தேதி சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்த நிலையில், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில் சதீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி நவம்பர் 4ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தன் மீது பதியபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், சட்டவிரோதாமாகவும், அடிப்படை உரிமையை மீறியும், அவசரகதியில் குண்டர் சட்டம் பதியபட்டுள்ளதாகவும், குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல் முறையாக பிறப்பிக்கபடவில்லை என்பதால் இது இயற்கை நீதிக்கு முரணாணது என தெரிவித்துள்ளார்.எனவே சென்னை காவல் ஆணையரின் இயந்திரதனமான உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: சிறையிலிருந்து விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்.. 4 வழக்குகளிலும் ஜாமீன்.. நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Chennai High court, Tamilnadu government