தமிழக தேர்தல் பணிக்காக மங்களூருவில் இருந்து வந்த துணை ராணுவத்தினர்

துணை ராணுவம்

தமிழக தேர்தல் பணிக்காக மங்களூருவில் இருந்து 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவத்தினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

  • Share this:
தமிழக சட்டசபைத் தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்து ரயில் மூலமாக துணை ராணுவபடையினர் சென்னை வந்தடைய உள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 100 வீரர்கள் வீதம், 4,500 பேர் இடம்பெற்று இருப்பார்கள். சென்னையில் 12 துணை ஆணையரின் கீழ் 12 கம்பெனி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மீதமுள்ள 33 கம்பெனி துணை ராணுவப்படையினரும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இந்நிலையில் இன்று முதற்கட்டமாக தமிழக தேர்தல் பணிக்காக மங்களூருவில் இருந்து 92 பேர் கொண்ட ஒரு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவத்தினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். சென்னை வந்த துணை இராணுவத்தினரை தமிழக போலீசார் ஏற்பாடு செய்துள்ள இரண்டு பேருந்துகள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக வருகின்ற 27 ஆம் தேதி மணீப்பூரில் இருந்து ரெயில் மூலமாக துணை ராணுவ படையினர் சென்னை வர உள்ளனர். இதற்கான ரெயில் மணிப்பூரில் இருந்து ஏற்கனவே புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: