Home /News /live-updates /

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை - விசாரணை வளையத்தில் பாஜக நிர்வாகி

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கொலை - விசாரணை வளையத்தில் பாஜக நிர்வாகி

திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை

திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை

Kovilpatti Murder : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கொலை விவகாரத்தில் பாஜக நிர்வாகியிடம் விசாரணை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India
கோவில்பட்டி அருகே ஊராட்சித் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்தில் பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ், கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த பாஜக ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் கார்த்திக் மற்றும் வசந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Crime News, Tuticorin

அடுத்த செய்தி