உலக அளவில் மெகா ஹிட்டான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
இந்திய சினிமாவில் தரம்வாய்ந்த படைப்புகளை இயக்குனர் ராஜமவுலி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.
குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2ம் இடம் வகிக்கிறது.
இந்த படத்தின் வெற்றியால் ராஜமவுலியின் அடுத்த படமான ஆர்ஆர்ஆர் மீது எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதை நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பாக ஆர்ஆர்ஆர் படத்தை அவர் உருவாக்கியிருந்தார்.
இதையும் படிங்க - Nenjukku Needhi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!
ஒவ்வொரு காட்சிகளும் கடின உழைப்புடன் செதுக்கப்பட்டதால், ரிட்டர் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு அதிகம் காணப்பட்டனர். ஃபேமிலி ஆடியன்ஸையும் படம் திருப்திபடுத்தியதால் ஒவ்வொரு வாரமும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இந்த திரைப்படம் ஓடியது. அதிலும் குறிப்பாக 2டி மற்றும் 3டி தொழில் நுட்பத்தில் படம் வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் உன்னதான சினிமா அனுபவத்தை பெற்றனர்.
இதையும் படிங்க - நெஞ்சுக்கு நீதி படத்தினை பார்க்க இரவு முதலே திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்
கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி ஆர்ஆர்ஆர் வெளியான நிலையில், இன்று ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இந்தி மொழிப் பதிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட, மற்ற தென்னிந்திய பதிப்புகளை ஜீ 5 வெளியிட்டுள்ளது.
திரையில் சாதனையை ஏற்படுத்தியது போலவே, ஓடிடி ஒளிபரப்பான ஸ்ட்ரீங்கிலும் இந்த படம் சாதனை படைக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
ராஜமவுலி அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தை இயக்கவுள்ளார். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளதாகவும், முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.