போட்டியின் போது சரமாரியாக தாக்கிக் கொண்ட பாக்-ஆப்கன் ரசிகர்கள்! - வீடியோ

ICC World Cup 2019 | Pakistan vs Afghanistan | போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தின் வெளியே இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

Web Desk | news18
Updated: June 29, 2019, 10:10 PM IST
போட்டியின் போது சரமாரியாக தாக்கிக் கொண்ட பாக்-ஆப்கன் ரசிகர்கள்! - வீடியோ
மோதலில் ஈடுப்பட்ட இருநாட்டு ரசிகர்கள்
Web Desk | news18
Updated: June 29, 2019, 10:10 PM IST
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்தின் வெளியே இருநாட்டு ரசிகர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.


இதனிடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்தின் வெளியே இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆப்கான் ரசிகர்கள் பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து பலூன்களை பறக்கவிட்டனர்.இதைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் அவர்கள் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால் மைதானத்திற்கு வெளியே பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மைதானத்திற்கு வெளியே இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை சமதானப்படுத்தி விலக்கிவிட்டனர்.

Loading...
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேற இன்றைய போட்டி முக்கியமானதாகும். இதனால் இன்றைய போட்டியைக் காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்திற்கு படையெடுத்தனர்.

Also Watch

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...