முகப்பு /செய்தி /Breaking and Live Updates / பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2 அறிவிப்பு - இரண்டாம் பாகத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2 அறிவிப்பு - இரண்டாம் பாகத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2

பா.ரஞ்சித்தின் சார்பட்டா 2

தங்கலான் திரைப்படத்தை முடித்ததும் சார்பட்டா 2 படத்தை பா.ரஞ்சித் தொடங்குகிறார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.  அந்த திரைப்படம் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என பா.ரஞ்சித் அறிவித்திருக்கிறார்.  அவர் தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான வேலைகள் விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது.

அதை முடித்தவுடன் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை ரஞ்சித் தொடங்க உள்ளார்.  முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த திரைப்படத்திலும் இடம்பெறுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் கூறுகின்றனர்.  ஆனால் முதல் பாகத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.  அவரின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தது.

ஆனால் தற்போது பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கு அவர்கள் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Pa. ranjith