முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு

பி.எச்.பாண்டியன் மணிமண்டபம்

மணி மண்டபத்தை திறந்து வைக்க திறந்தவெளி ஜீப்பில் வருகை தந்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நெல்லை கோவிந்தப்பேரியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

  பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 25 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவர் நாற்காலியில் அவர் அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ள சிலை மற்றும் மணி மண்டபத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

  முன்னதாக, மணி மண்டபத்தை திறந்து வைக்க திறந்தவெளி ஜீப்பில் வருகை தந்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: