வர்த்தக நடவடிக்கைகள் தொடங்க வேண்டுமென்றால் போக்குவரத்து அவசியம் - ப.சிதம்பரம்..!

மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில் சேவையை மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

வர்த்தக நடவடிக்கைகள் தொடங்க வேண்டுமென்றால் போக்குவரத்து அவசியம் - ப.சிதம்பரம்..!
ப.சிதம்பரம்
  • Share this:
டெல்லியிலிருந்து நாளை முதல் 15 ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் என்ற ரயில்வே துறையின் நேற்றைய அறிவிப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் முடியும் முன்பே ரயில் சேவை படிப்படியாகத் தொடங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவித்துள்ளது.ரயில்வே துறையின் அறிவிப்பைப் பாராட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில் சேவையை மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோன்ற கவனச் செயல்பாடு சாலைப் போக்குவரத்திலும், விமானப் போக்குவரத்திலும் பின்பற்றித் தொடங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார, வர்த்தகச் செயல்பாடுகள் தீவிரமாகத் தொடங்குவதற்கு ஒரே வழி சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, பயணிகள்,சரக்குப் போக்குவரத்தை தொடங்கினால் மட்டும்தான்' எனத் தெரிவித்துள்ளார்.
First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading