எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இரண்டு நாட்களில் வெளியாகும் - நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நானே எழுதினேன் என்றும் இன்று மற்ற கட்சிகளில் வரும் தேர்தல் அறிக்கையை 2009-ம் ஆண்டே எங்கள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.

 • Share this:
  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் முக்குலத்தோரை சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

  சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவர் கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கை இரண்டு நாட்களில் வெளியாகும் என்றும் எங்களது தேர்தல் அறிக்கையை கூட்டணி கட்சி என்ற முறையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.

  முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை சந்திக்கும் வரை மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தேன் என பேசிய அவர் அதிமுகவில் 2 இடங்கள் வரை தருகிறோம் என கூறினார்கள்.
  நான் பேசிய ஒரே பேரம் மக்கள் நலன் என தெரிவித்தார். மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் முக்குலத்தோரை சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

  எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நானே எழுதினேன் என்றும் இன்று மற்ற கட்சிகளில் வரும் தேர்தல் அறிக்கையை 2009-ம் ஆண்டே எங்கள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.
  கூட்டணியில் உள்ள நடிகை குஷ்பூவிற்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளோம். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை; அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது என்றார்.
  Published by:Vijay R
  First published: