அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாறலாம் - ராஜ்நாத் சிங்

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாறலாம் - ராஜ்நாத் சிங்
Breaking News
  • Share this:
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை எதிர்காலத்தில் மாறலாம் என பாதுகபாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பொக்ரானில் வாஜ்பாய்க்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம். எதிர்காலத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்தே முடிவுகள் அமையும்’ என்று தெரிவித்தார். அவருடைய அறிவிப்பு பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்