அர்ச்சகர் பயிற்சி முடித்த பிற சாதியைச் சேர்ந்த 205 பேரின் தற்போதைய நிலை என்ன?

அர்ச்சகர் பயிற்சி முடித்த பிற சாதியைச் சேர்ந்த 205 பேரின் தற்போதைய நிலை என்ன?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 21, 2019, 10:57 PM IST
  • Share this:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான அரசாணை 2006ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இச்சட்டம் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது, என்பது குறித்த நியூஸ்18 தொலைக்காட்சி மேற்கொண்ட கள ஆய்வு குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை 2006ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை தல்லாகுளத்தில் மாரிசாமி என்பவர் ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு வேறு எவருக்கும் அர்ச்சகராக பணிநியமனம் வழங்கப்படவில்லை. 2007-08 ஆம் ஆண்டில் அரசு நடத்திய பயிற்சி மையங்களில் 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ கோயில்களுக்கான பயிற்சி நிலையங்களும் சென்னை, திருச்சியில் வைணவக் கோயில்களுக்கான பயிற்சி நிலையங்களும் துவக்கப்பட்டன.

இங்கு படித்து முடித்த 206 பேருக்கு மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத ஒருவருக்கு மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோயிலில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஆகம விதிகள் பொருந்தாத ஐயப்பன் கோயிலில் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற 205 பேர் இன்னும் அரசு பணி கிடைக்காமல் உள்ளனர்.


அர்ச்சகர் கோலத்தை கலைக்காமல் தனியார் கோயில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தாலும் அரசு அங்கீகரித்து இன்னும் பணிவழங்கவில்லை என கூறுகிறார் பயிற்சி பெற்ற அர்ச்சகர் மாணவர் சங்க தலைவர் ரங்கநாதன்.

 

ஆகம வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களை நியமனம் செய்யாமல் வழிவழியாக அர்ச்சகராக இருப்பவர்கள் குடும்பங்களில் இருந்தே அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக குறிப்பிடுகிறார் அர்ச்சகர் சிவசங்கர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது சட்டமாக நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் செயல்வடிவம் பெறாமலே உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள்.

Also see:


 
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்