• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • ‘தல’ தோனியின் முதல் டி20 வெற்றி: 2007 உ.கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய நாள்: வீடியோ

‘தல’ தோனியின் முதல் டி20 வெற்றி: 2007 உ.கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய நாள்: வீடியோ

வெற்றி மகிழ்ச்சியில் அன்றைய தல தோனி, பின்னணியில் ராபின் உத்தப்பா.

வெற்றி மகிழ்ச்சியில் அன்றைய தல தோனி, பின்னணியில் ராபின் உத்தப்பா.

2007 டி20 உலகக்கோப்பை தல தோனியின் கேப்டன்சியில் முதல் வெற்றி பெற்ற நாள் இந்த நாள்தான், டர்பனில் 2007-ல் செப்.14ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ‘டை’ ஆக பவுல் அவுட் முறையில் வென்ற நாளாகும் இது. ஆகவே தல தோனியின் முதல் வெற்றி நாள் இது.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டி நோ-ரிசல்ட் ஆக பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை பெரிய வெற்றி பெற்று இதே நாளில் 2007 டி20 உலகக்கோப்பையில் பரம வைரிகளான இந்திய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஷோயப் மாலிக் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இந்திய அணி ராபின் உத்தப்பாவின் அற்புதமான 50 ரன்களாலும் தல தோனியின் 33 ரன்களாலும் இந்திய அணி 141/9 என்று சுமாரான இலக்கையே எட்டியது. முகமது ஆசிப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார், இதில் சேவாக் 5 ரன்களில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். யுவராஜ் சிங், கவுதம் கம்பீரையும் ஆசிப் சொற்ப ரன்களில் வெளியேற்றினார்.

    தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் எடுக்க, இர்பான் பதான் 20 ரன்களை எடுத்தார். ஷாகித் அப்ரீடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி அகார்கர், ஆர்.பி.சிங், இர்பான் பதான் கூட்டணியிடம் சிக்கி 47/4 என்று ஆனது. ஆனால் மிஸ்பா உல் ஹக் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து நன்றாக ஆடினார், ஆனால் அவர் கடைசி பந்தை கவர் திசையில் அடித்து ஓடினார், யுவராஜ் சிங் அப்போதெல்லாம் அபார பீல்டர் பந்தைப் பிடித்து ரன்னர் முனைக்கு துல்லிய த்ரோவை அனுப்ப ஸ்ரீசாந்த் பைல்களை அகற்ற ஆட்டம் டை ஆனது. இரு அணிகளும் 141 ரன்கள்

    அப்போதெல்லாம் டை ஆனால் பவுல் அவுட் முறையே அமலில் இருந்தது, அதாவது பெனால்டி கிக் போல் பவுலிங் செய்து ஸ்டம்பைத் தாக்க வேண்டும் அதாவது பவுல்டு செய்ய வேண்டும். அதில் இந்திய அணி 3 முறை பவுல்டு செய்து 3-0 என்று வென்றது, பாகிஸ்தான் ஒரு முறை கூட வெறும் ஸ்டம்பை அடிக்கவில்லை. பேட்ஸ்மென்கள் இல்லாமல் ஸ்டம்பை மட்டும் பந்து வீசி பவுல்டு செய்ய வேண்டும்.

    அப்படி பவுல் அவுட் முறையில் சேவாக், ஹர்பஜன், ராபின் உத்தப்பா பந்து வீசி துல்லியமாக ஸ்டம்பை தாக்க பாகிஸ்தானின் யாசிர் அராபத், உமர் குல், ஷாகித் அப்ரீடி இலக்கை தவற விட்டனர். இதனால் இந்தியா 3-0 என்று வெற்றி பெற்றது.



    இதோடு முடியாமல் இறுதிப் போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் மோதின முதல் முறையாக தல தோனி அப்போது பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றார்.இந்த முதல் போட்டியை மறக்க முடியாது, பவுல் அவுட் முறை அதன் பிறகு கைவிடப்பட்டு சூப்பர் ஓவர் முறை வந்தது.

    தோனி தற்போது இந்திய அணியை 2021 உலகக்கோப்பை தொடரில் வழிகாட்டி கோப்பையை வெல்வதற்காக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முதல் வெற்றியின் மலரும் நினைவுகளை அசைபோடுவது நல்லதுதானே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: