ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சிலம்பாட்ட பயிற்சி! ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சிலம்பாட்ட பயிற்சி! ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

விஜய்

விஜய்

சிலம்பாட்ட பயிற்சி பெறும் சிறுவர்கள் மற்றும் ஆட்டோ பெற்ற மணிகண்டன் ஆகியோர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நடிகர் விஜயின் பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. அதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களே பல்வேறு பிரிவுகளாக பிரித்து நிர்வாகித்து வருகின்றனர். அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த திமிரி நகர பிரிவில் 96 சிறுவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அஜய் என்பவர் சிலம்பாட்ட பயிற்சி அளிக்கிறார். இதற்காக அந்த நகர விஜய் மக்கள் இயக்கத்தினர், மாதம் 20 ஆயிரம் அவருக்கு சம்பளம் வழங்கி வருகின்றனர்.

இதன் மூலம் சிறுவர்களுக்கு இலவச சிலம்பாட்ட பயிற்சி வழங்கப்பட்டுகிறது. இது தவிர, வறுமையில் இருந்த மணிகண்டன் என்பவருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் முன்பணம் செலுத்தி, அவரின் வாழ்வாதாரத்துக்கு உதவும் ஆட்டோ வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சிலம்பாட்ட பயிற்சி பெறும் சிறுவர்கள் மற்றும் ஆட்டோ பெற்ற மணிகண்டன் ஆகியோர் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

அந்த நிகழ்ச்சி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இது தவிர சென்னையில் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதை கடை நடத்துபவர்களுக்கு இலவசமாக குடைகள் வழங்கப்பட்டன.

Read More: மரண மாஸ்.. மிரட்டும் காட்சிகள்! வெளியானது 'காந்தாரா' தமிழ் ட்ரைலர்!

சமீப காலமாக நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Vijay, Vijay makkal iyakkam